மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 330 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
