Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!!

இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுபாலினத்தவர்களை குற்றவாளிகளாக கருதும் சட்டங்களை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கை தனது கடமைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வதற்கு பொறுப்பான ஐ.நா சிறுவர் உரிமைகள் குழு, தன்பாலின உறவுகளை குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இலங்கை தொடர்பான அதன் அறிக்கையில், மாற்றுப்பாலின (LGBT) மக்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தலைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இலங்கை அரசாங்கத்திடம் அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை, அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், “சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்க அவற்றைக் கொண்டுவருவதற்காக” தண்டனைச் சட்டச் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குற்றவியல் சட்டத்தின் தற்போதுள்ள சில பிரிவுகளின் கீழ், சிறுவர்கள் “குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்” என்பதையும் அந்தக் குழு எடுத்துக்காட்டுகிறது.

எனினும்,”சட்டம் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்டது என்றும், தற்போதைய அரச நடைமுறையின் கீழ், சிறுவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை” என்றும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியது.

முன்மொழியப்பட்ட குற்றவியல் (திருத்தம்) சட்டமூலம் பிரிவு 365 ஐ திருத்துவது மற்றும் பிரிவு 365A ஐ ரத்து செய்வது, சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், சிறுவர்களுக்கான இலங்கையின் ஐ.நாவுக்கான வாக்குறுதிகளை மீறப்படுகிறது என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் ஷர்மிளா கோனவல தலைமையிலான நகர்ப்புற குடிமக்கள் போன்ற அமைப்புகளால் பரப்பப்படுகின்ற பொய்யான கதைகளை ஐநா சிறுவர் உரிமைகள் குழுவின் வலுவான அறிக்கை நேரடியாக சவால் செய்கிறது.

100க்கும் மேற்பட்ட சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சிறுவர் பாதுகாப்புப் படை மற்றும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு அறக்கட்டளை மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் ஆகியோர் குற்றவியல் (திருத்தம்) சட்டமூலத்துக்கு ஆதரவாக சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தச் சட்டத்தை இயற்றினால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என்று பரப்பப்படும் “பொய்களை” நம்ப வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular