Saturday, July 27, 2024
HomeTamilமைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த ரோகித் சர்மா!!

மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த ரோகித் சர்மா!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி 10-ம் திகதி கொழும்பு நகரில் துவங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.

357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் நன்றி தெரிவித்துள்ளது ரசிகர்ளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஏனெனில் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது. எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த போட்டியில் மீண்டும் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்ததால், மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

அதே போன்று பும்ரா கடந்த 8 முதல் 10 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular