Monday, December 11, 2023
HomeTamilமண்சரிவில் சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு!!!

மண்சரிவில் சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு!!!

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் எவருக்கு உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 64 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular