Saturday, July 27, 2024
HomeTamilஅதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை!!

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை!!

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுற்றாடல் சட்டப் பிரிவின் அழைப்பாளர் சரக ஜயரத்ன உள்ளிட்ட குழுவினர், குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

சட்டத்தில் காட்டு யானைகள் தொடர்பான சில முக்கிய பிரிவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, அங்கு பிரிவு 3, பிரிவு 6, பிரிவு 19, பிரிவு 20 மற்றும் பிரிவு 30 ஆகியவற்றின் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

வன விலங்குகளை கொல்வதற்காக விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என்றும், காட்டு யானைகளை பொதுச் சொத்தாக மாற்றுவதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும் முன்மொழியப்பட்டது.

அத்துடன், இந்த நாட்டில் காட்டு யானைகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்களில் ஒன்றாக சட்டவிரோத உயர் அழுத்த மின் கம்பிகள் பொருத்தப்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு தெளிவான விளக்கம் இல்லாததால், தெளிவான விளக்கம் மற்றும் அது தொடர்பான தண்டனைகள் உள்ளிட்ட புதிய சரத்துகளை அறிமுகப்படுத்துவது குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, குழுவில் விவாதிக்கப்பட்ட சட்டத் திருத்தம் தொடர்பான தற்போதைய முன்மொழிவுகளை மீண்டும் பதிவு செய்யவும், வனவிலங்கு திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட குழு மூலம் தொடர்புடைய பரிந்துரைகளில் உடன்பாட்டை எட்டவும், குறிப்பிட்ட காலக்கெடுவின் கீழ் சட்டத் திருத்தத்தை இறுதி செய்யவும் குழு பரிந்துரைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular