Friday, July 26, 2024
HomeTamilதலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக பெயரிட தீர்மானம் !

தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக பெயரிட தீர்மானம் !

தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி ​வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் ​நோக்கமாகும்.

இந்தக் கப்பல் சேவையை இலாபமீட்டும் செயற்றிட்டமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் துறைமுகமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தலைமன்னாரின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular