Saturday, July 27, 2024
HomeTamilதமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியானது!!

தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியானது!!

அகதிகளாக பதிவு செய்த 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், 92,435 இலங்கையர் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுமொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருகின்றன. தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங் களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 34,000 இலங்கையர் இந்தியாவில் வேறு இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Ali-Sabry

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவான இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு திரும்ப விரும்பும் நபர்களுக்கு ஆதரவளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ​​வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான தமது பரிந்துரைகள் மற்றும் தேவைகளை சமர்ப்பிக்க முடியும். தமிழகத்தில் பல தசாப்தங்களாக எஞ்சியுள்ள இலங்கையரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது.” – என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular