ஹன்வெல்ல, களனி ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மேலும் இருவருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மது அருந்திவிட்டு குறித்த இளைஞர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
காணாமல் போனவர் பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடையவராவர்.
குறித்த இளைஞரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.