Saturday, July 27, 2024
HomeTamilபோர் தொடரும்: இஸ்ரேல் மந்திரி!!

போர் தொடரும்: இஸ்ரேல் மந்திரி!!

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3-வது மாதமாக நடைபெற்று வருகிறது.

வடக்கு காசாவை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போது பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் உள்ளனர்.

இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. சபையில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், “தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசு (gift) போன்று அமைந்துவிடும். திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்” என்றார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்திக்கிறார். இதற்கிடையே, போருக்குப்பின் கையாளப்படும் காசாவை கையாளப்படும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular