Saturday, July 27, 2024
HomeTamilஅமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களின் பணி காலம் 5 ஆண்டுகளாக உயர்வு

அமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களின் பணி காலம் 5 ஆண்டுகளாக உயர்வு

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர்.

கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது.

கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த மாதம் 22ம் திகதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.

இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular