Saturday, July 27, 2024
HomeTamilமுன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை!!

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 05 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனையை வழங்கும்போது பிரதிவாதிக்கு 20,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கஹவத்தை பொலிஸார், அன்றைய பிரதியமைச்சராக இருந்த பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய தயாராக இருந்த போது, அவரை கைது செய்ய வேண்டாம் என அப்போதைய கஹவத்தை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular