Saturday, July 27, 2024
HomeUncategorizedஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பமாகியுள்ளன.

காலவரையின்றி மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

அந்த பல்கலைகழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த மாதம் 18ம் திகதி முதல் அந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு கல்வி விடுமுறை வழங்கப்பட்டு அடுத்த மாதம் 18 ஆம் திகதி தடை தாண்டல் பரீட்சைகள் ஆரம்பமாகும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular