Saturday, July 27, 2024
HomeTamilதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!!

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!!

இலங்கைக்கான ஒட்டுமொத்த தினசரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலின் திறன் 9% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தற்போது நிலவும் வரட்சி நிலைமைக்கு தீர்வாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அனர்த்த நிவாரண நிலையம் இணைந்து 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 52 பிரதேச செயலகங்களுக்கு தேவையான அளவு நீரை விநியோகித்ததாக பிரதேச சபையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களில் 52,435 குடும்பங்களைச் சேர்ந்த 181,676 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிலவும் வரட்சி நிலைமையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நீர் விநியோகத்திற்கு 4.5 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular