Saturday, July 27, 2024
HomeTamilஎரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனங்களுக்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, சினோபெக் (Sinopec), யுனைடெட் பெட்ரோலியம் (United Petroleum), ஆர்எம் பார்க்ஸ் (RM Parks of USA) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 20 வருடங்களுக்கு பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்பபடும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒவ்வாரு நிறுவனத்துக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறித்த ஒவ்வொரு நிறுவனங்களாலும் புதிய இடங்களில் மேலும் தலா 50 எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular