Saturday, July 27, 2024
HomeTamilApple ios 17 இல் வரப்போகும் முக்கிய வசதிகள்!

Apple ios 17 இல் வரப்போகும் முக்கிய வசதிகள்!

உலகளவில் சிறந்த OS என்று அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் iOS விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் iOS 17 என்று வெளியாகவுள்ளது. இந்த புதிய OS ioS 16 போல மிகப்பெரிய அப்டேட் என்பது போல இல்லாமல் சில முக்கியமான வசதிகளை மட்டும் பெற்றிருக்கும்.

ஐரோப்பாவில் புதிய விதிமுறைகளை ஐரோப்பிய யூனியன் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதால் இந்த விதிகளுக்கு ஏற்ப ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளுக்கு தனித்தனியாக App Store ஒன்றை உருவாக்கவுள்ளது. இதில் நாம் App store இல்லாமல் தனியாக சில மூன்றாம் கட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதிகள் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தும் ஐரோப்பிய யூனியன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதால் இவை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மட்டுமே இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இப்போது தொடரும் அதே OS நடைமுறை தொடரும்.

அடுத்த ஜெனெரஷன் Apple Car Playயில் பல டிஸ்பிளே, விட்ஜெட்ஸ், இன்டெக்ரேஷன், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல், FM ரேடியோ போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Headset Support, ஆப்பிள் நிறுவனம் புதிதாக AR மற்றும் VR கருவிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். இதற்கான சப்போர்ட் நமக்கு இந்த புதிய iOS மூலமாக கிடைக்கும்.

ஐபோன் 15 சீரிஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11, ஐபோன் XS Max, ஐபோன் XS, ஐபோன் XR, ஐபோன் SE (2022), ஐபோன் SE (2020) அப்டேட் பெரும்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular