Friday, July 26, 2024
HomeTamilமுதலாம் திகதி முதல் கைரேகை மூலம் வருகை பதிவு கட்டாயம் !

முதலாம் திகதி முதல் கைரேகை மூலம் வருகை பதிவு கட்டாயம் !

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல், சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் பிற நிர்வாக தர அதிகாரிகள் தங்கள் தினசரி வருகை மற்றும் வெளியேறல் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சி. கருணாரத்னவின் கையொப்பத்துடன் கூடிய இந்தக் கடிதம் அனைத்து மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அனைத்து பிரதம நிதி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்கும் போது கைரேகை பதியும் முறைமை இதுவரையில் இருந்ததில்லை எனவும் அவ்வாறான தீர்மானம் வைத்தியர்களின் சேவை அமைப்புக்கு எதிரானது எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

அத்துடன், மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர அதிகாரிகள் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular