Saturday, July 27, 2024
HomeTamil60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: சடலமாக மீட்பு!!!

60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: சடலமாக மீட்பு!!!

இந்தியாவில் மற்றுமொரு ஆழ்துளைக் கிணறு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்றைய தினம் 8 வயது சிறுவன் தவறி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமிரா ஒன்று ஆழ்துளை கிணற்றில் இறக்கப்பட்டுள்ளது.

60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் இன்று(மார்ச் 15) சடலமாக மீட்கப்பட்டார். 24 மணி நேரமாக மீட்பு படையினர் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவன் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular