Saturday, July 27, 2024
HomeTamilஹட்டன் டிக்கோயா தீயணைப்பு பிரிவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஹட்டன் டிக்கோயா தீயணைப்பு பிரிவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கொட்டகலை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டம் இன்றைய தினம் அந்தப்பிரதேசத்தில் வசிப்பவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்ட போது தீயணைப்பு பிரிவினர் தாமதத்துடன் வருகை தந்தமையினால் முற்றாக தீக்கிரையானதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கொட்டகலை நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டது.

திம்புள்ள- பத்தனை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

திம்புள்ள- பத்தனைகாவல் துறையினர், பிரதேசவாசிகள், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்திருந்தால் இந்த பாரிய அனர்த்தத்தை கட்டுப்படுத்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

தீயினால் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் திம்புள்ள பத்தனை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular