Saturday, July 27, 2024
HomeTamilஇன்று முதல் புதிய தவணை ஆரம்பம்!

இன்று முதல் புதிய தவணை ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் இன்று (27) ஆரம்பமாகியுள்ளன.

குறித்த தவணை இன்று முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, 2022ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிவரை குறித்த செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறும்.

மனைப்பொருளியல், பரதநாட்டியம், கீழைத்தேய, மேலைத்தேய மற்றும் கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும் முதலான பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் குறித்த காலப்பகுதியில் இடம்பெறவுள்ளன.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, 1911 அல்லது 0112 784 208 அல்லது 0112 784 537 அல்லது 0112 786 616 முதலான தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular