Saturday, July 27, 2024
HomeTamilயாழில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இளைஞன் பலி!!

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்தில் இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.

இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular