Saturday, July 27, 2024
HomeTamilஎரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது!!

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது!!

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் மேலும் ஆதரவளிப்பார்கள் என அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை எனவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆர்டர்களை பெற்று குறைந்தபட்ச இருப்புக்களை பேணுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular