Saturday, July 27, 2024
HomeTamilமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கிய கூகுள்!!

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கிய கூகுள்!!

கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து புதிய மாடல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அறிமுகமானது. புதிய பிக்சல் ஃபோல்டு மாடலிலும் கூகுள் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 7.6 இன்ச் ஃபோல்டபில் ஸ்கிரீன், 5.8 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன், இரண்டிலும் OLED பேனல் மற்றும், 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. பிக்சல் ஃபோல்டு மாடலில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீர் ஹிஞ்ச் அதிக உறுதியாகவும், எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. இதையே செல்ஃபி கேமராவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் 10.8MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular