Saturday, July 27, 2024
HomeTamilஜிமெயில் அக்கவுண்ட்களை அழித்திடுவோம் - கூகுள் எச்சரிக்கை!!

ஜிமெயில் அக்கவுண்ட்களை அழித்திடுவோம் – கூகுள் எச்சரிக்கை!!

ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

“எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது.

இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்,” என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?

கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular