Saturday, July 27, 2024
HomeTamilவாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய பாதுகாப்பு அம்சம்!!

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய பாதுகாப்பு அம்சம்!!

வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் “சாட் லாக்” (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.

“சீக்ரெட் கோட்” (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும்.

இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.

மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular