Saturday, July 27, 2024
HomeTamil3,000 கிலோகிராம் போதைப் பொருளை அழிக்க அரசாங்கம் நடவடிக்கை!

3,000 கிலோகிராம் போதைப் பொருளை அழிக்க அரசாங்கம் நடவடிக்கை!

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3,000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular