Saturday, July 27, 2024
HomeTamilகுரங்குகளை ஏற்றுமதி செய்ய காத்திருக்கும் அரசாங்கம்!!

குரங்குகளை ஏற்றுமதி செய்ய காத்திருக்கும் அரசாங்கம்!!

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தற்போது நீதிமன்ற வழக்குகளே தடையாக உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்தும் ஆர்வம் காட்டி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர்களை நாசம் செய்யும் ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என முன்னதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் இலங்கையில் மட்டுமே உயிர்வாழும் டோக் மக்காக் குரங்குகள், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டோக் மக்காக் குரங்குகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனமாக கருதப்படவில்லை. இதன் காரணமாக அரசாங்கத்தின் திட்டத்தை விலங்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். அவர்கள், இந்த குரங்குகள், சீன உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்படவுள்ளன என்ற கூற்றை நம்பவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular