Saturday, July 27, 2024
HomeTamilமாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியீடு!!

மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியீடு!!

2023ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்த நிலையில், 50 ஆயிரத்து 664 பேர் இந்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிட முடியும்.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 147 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 145 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 144 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புத்தளம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular