Saturday, July 27, 2024
HomeTamilஅரசியல்மனித புதைகுழி- இலங்கை உரிய முறையில் கையாள வேண்டும் !

மனித புதைகுழி- இலங்கை உரிய முறையில் கையாள வேண்டும் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான விடயத்தை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பேணுவது குறித்து கனடா, தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கருத்து சுதந்திரம், பொருளாதாரம், சமூக வலுவூட்டல், கலாசார உரிமைகள் என்பன சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கத்தின் ஊடாகவும், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடக்குமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக உரையாற்றிய பல நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் அகற்றப்பட்டமையை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular