Saturday, July 27, 2024
HomeTamilடிஜிட்டல் சேவை வரி குறித்து IMF விளக்கம்!!

டிஜிட்டல் சேவை வரி குறித்து IMF விளக்கம்!!

இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் தற்போதைய வேலைத்திட்டத்தில் விவாதிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

சர்வதேச கூட்டாண்மை வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடக்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான சில அண்மைய செய்திகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் IMF பேச்சாளர் அறிக்கை வெளியிட்டு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் முக்கிய தூணாக வருமானத் திரட்டல் உள்ளது என்றும், தற்போது செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் வரவிருக்கும் முதல் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, உலகளாவிய கடன் வழங்குபவர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கூடுதல் வருமானத்தை எவ்வாறு திரட்டுவது என்பது அதிகாரிகள். டிஜிட்டல் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் உள்ள நன்மைகள் மற்றும் சவால்களை கருத்தில் கொள்வதும் இதில் அடங்கும்.

இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த நலன் கருதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular