கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஒன்லைன் முறைமையில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
