Friday, July 26, 2024
HomeTamilஏவுகணைத் தாக்குதல்களை நடத்தலாம் - புலனாய்வுத் துறை எச்சரிக்கை!

ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தலாம் – புலனாய்வுத் துறை எச்சரிக்கை!

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு, நாளையுடன் ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில், ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தலாம் என யுக்ரைனின் புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து, வெகுவிரைவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மறைமுக அச்சுறுத்தல்களை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கண்டித்துள்ளார்.

இதேவேளை, யுக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகளை வழங்க செக் குடியரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

89 கவச வாகனங்கள், 4 வானூர்திகள், 60,000 ரொக்கட்டுகள் உள்ளிட்ட மேலும் பல இராணுவ உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular