Saturday, July 27, 2024
HomeTamilஇத்தாலி கப்பல் விபத்து - சுமார் 40 ஏதிலிகள் கடலில் மூழ்கினர்!!

இத்தாலி கப்பல் விபத்து – சுமார் 40 ஏதிலிகள் கடலில் மூழ்கினர்!!

தெற்கு இத்தாலியின் கடலோர நகரமான க்ரோடோனுக்கு அருகில் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒரு சிறு குழந்தை உட்பட சுமார் 40 ஏதிலிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே 100க்கும் மேற்பட்டவர்களுடன் தரையிறங்க முயன்றபோது கப்பல் உடைந்ததாக கூறப்படுகிறது.

கடற்கரையில் இருந்து அருகிலுள்ள கடலோர ரிசார்ட்டில் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மோதல் மற்றும் வறுமையில் இருந்து வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு செல்கின்றனர்.

80 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் கடற்கரையில் நாற்பத்து மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படகு எங்கிருந்து பயணித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் கப்பலில் இருந்தவர்கள் ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலிய அதிகாரிகள் நிலத்திலும் கடலிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular