Saturday, July 27, 2024
HomeTamilயாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நாம் இதனை, தமிழ் மக்களின் சுதந்திரத்தை மையப்படுத்தியதாக கொண்டாட தீர்மானித்தோம். அதன் ஒரு பகுதியாக இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழாவும் இடம் பெறுகிறது.

அதேநேரம், இந்திய இலங்கை உறவின் அடிப்படையில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. மீள புதுப்பிக்ககூடிய வளங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இலங்கை தமிழ் கலாச்சார மையம். இந்திய இலங்கை உறவு ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றது. குறித்த நட்புறவை மேம்படுத்த நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆறுமுகநாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சியின் பின்னரே ஹக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட பிக்குகளினால் பௌத்த மறுமலர்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன், சுதந்திரத்துக்காக பாடுபட்ட தழிழ் தலைவர்களை நினைவு கூற வேண்டும். அவர்கள் இலங்கை சுதந்திரம் அடைய பாடுபட்டனர். மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்பட்டது. விசாக தினம் விடுமுறை தினமாக பிரகரனப்படுத்தப்பட்டது.

1915 நடந்த குழப்பங்கள் பொன்னம்பலம் இராமநாதன் முறியடிக்க வித்திட்டார். சிங்கள கலையை உலகிக்கு ஆனந்தகுமார சுவாமி காலத்திலேயே மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே 75 சுதந்திரத்தினத்தை ஒரு விழாவாக யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானித்தோம்.

வடக்கு குறித்து நேற்று பேசியிருந்தேன் நான் அது தொடரபில் பேச போவதில்லை. அரசாங்கத்தின் கொள்கை நல்லிணக்கம் கடந்த 8 ஆம் திகதி பேசினேன்.
அது தொடர்பிலும் நான் பேச போவதில்லை. யாழ்ப்பாண காலாச்சாரமும் – இலங்கை கலாச்சாரத்துக்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள கலாச்சாரமும் அதனுடன் இணைந்தது.

கலாச்சார யாழ்பாணத்தில் கொழும்பிலும் புலம்பெயரந்தவர்களாலும், கலாச்சார நிகழ்வுகள், இலங்கைக்கும் இலங்கைக்கும் வெளியிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், காலியில் முன்னெடுக்கப்பட்ட கலாச்சார நிகழ்வு போல யாழ்ப்பாணத்திலும் ஒரு காலச்சார நிகழ்வை முன்னனெடுக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கோரினேனன். யாழ்ப்பாணத்தில் இந்ந இடம் தான் கலாச்சார இருக்க வேண்டும்.

ஆகையால் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட இந்த மண்டபத்துக்கு சரஸ்வதி மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular