Saturday, July 27, 2024
HomeTamilதொடரூந்து பயணங்கள் ரத்து!

தொடரூந்து பயணங்கள் ரத்து!

ஐந்து அலுவலக தொடரூந்துகள் உட்பட 10 தொடரூந்து பயணங்கள் இன்று (13) ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தொடரூந்து பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை வரையில் இயக்கப்படவிருந்த 2 ரயில்கள், ரம்புக்கனை – கொழும்பு கோட்டை மற்றும் குருநாகல் – கொழும்பு கோட்டையிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்த தொடரூந்துகளும், ஹிக்கடுவை – மருதானை, அளுத்கம – மருதானை மற்றும் களுத்துறை – மருதானை ஆகிய தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படவிருந்த 3 தொடரூந்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைவிட, புத்தளம் மார்க்கத்தில் சிலாபத்திலிருந்து கொழும்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு தொடரூந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திகொலகே தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular