Saturday, July 27, 2024
HomeTamilநீண்ட தூர பஸ்களின் நேர அட்டவணை டிஜிட்டல் மயமாக்கப்பட்டது!!

நீண்ட தூர பஸ்களின் நேர அட்டவணை டிஜிட்டல் மயமாக்கப்பட்டது!!

இலங்கை போக்குவரத்துச் சபை நீண்ட தூர பஸ்களுக்கான நேர அட்டவணையை பயணிகள் எளிதாகக் கண்டறியும் வகையில் மொபைல் மற்றும் இணைய அடிப்படையிலான செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ‘sltb.eseat.lk’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலியை ஆரம்பித்து வைத்த அமைச்சர், இது இலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் பஸ்/கோச் முன்பதிவு தளமாகும், இது மில்லியன் கணக்கான இலங்கையர்களின் பயணத்தை மாற்றும் மற்றும் நாடு முழுவதும் பயணிக்க இருக்கைகளை முன்பதிவு செய்யும்.

செயலி மூலம்,அதன் ஒன்லைன் பஸ் டிக்கெட் முன்பதிவு சேவைகள் மூலம் மக்கள் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும், என்றார்.

“ஹொட்லைன் 1315 வழியாக 24X7 இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். 2,500 வழித்தடங்கள் உட்பட 400 நீண்ட தூர பஸ்கள் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பஸ்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் செயலி மூலம் காண்பிக்கப்படும்,”

அரசு நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஏற்ப இந்த அப்ளிகேஷன் தொடங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular