Saturday, July 27, 2024
HomeTamilஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 69.80 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 75.44 அமெரிக்க டொலராக சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து 2.12 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

ரஷ்ய – யுக்ரைன் மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular