Saturday, July 27, 2024
HomeTamilகனடாவில் மாணவர் விசா திட்டத்தில் புதிய மாற்றம்!!

கனடாவில் மாணவர் விசா திட்டத்தில் புதிய மாற்றம்!!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இலங்கை மற்றும் இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள்.

இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இலங்கை மற்றும் இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ம் திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular