Friday, July 26, 2024
HomeTamilகம்பஹாவில் அதிகரிக்கும் தொழுநோய்!!

கம்பஹாவில் அதிகரிக்கும் தொழுநோய்!!

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக வன்னிநாயக்க ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் நிலங்கி சுபசேகர தெரிவித்தார்.

தொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்று கூறிய தொற்றுநோயியல் நிபுணர், தோல் உணர்வின்மை மற்றும் புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தோல் மருத்துவமனை அல்லது தோல் மருத்துவரிடம் பரிந்துரைத்து தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொழுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எலும்பியல் நிலைக்கு கூட வழிவகுக்கும் என்றும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் முறையான சிகிச்சையால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் அவர் விளக்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular