Saturday, July 27, 2024
HomeTamilசார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி!!

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி!!

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துக் கொள்ளவுள்ளார்.

லண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

1953 ஆம் ஆண்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சுமார் 8,200 பேரில் இருந்து வியத்தகு குறைப்பு, மன்னன் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவைக் காண தேர்ந்தெடுக்கப்பட்ட 2,200 விருந்தினர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை பிரித்தானியா செல்லவுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்திற்குப் பின்னர் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழ்வார்கள். எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular