Saturday, July 27, 2024
HomeTamilகோதுமை மாவுக்கான விலை சூத்திரம்!!

கோதுமை மாவுக்கான விலை சூத்திரம்!!

கோதுமை மாவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொது நிதிக்கான குழு வலியுறுத்தியுள்ளது.

கோதுமை மாவுக்கான விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது இலங்கையின் களஞ்சியசாலைகளில் உள்ள கோதுமை மாவின் அளவை கணக்கிட்டு இரண்டு மாதங்களுக்குள் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு COPF தலைவர் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து விவாதிக்கப்பட்டது.

இலங்கை முழுவதிலும் உள்ள கடைகளில் கோதுமை மா பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இச்சந்திப்பின் போது குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், நிதியமைச்சினால் வழங்கப்பட்ட விலைகளின்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவை ரூ. 198 அல்லது அதற்கு குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.

கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் எரிவாயு மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த தலைவர், கோதுமை மாவின் விலையை நிர்ணயம் செய்வதற்கு விலை சூத்திரத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் பலதரப்பட்ட முறையில் செயற்படும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular