Saturday, July 27, 2024
HomeTamilகொரோனா தடுப்பூசிக்கு உதவிய கண்டுபிடிப்பால் நோபல் பரிசு பெறும் 2 மருத்துவர்கள்

கொரோனா தடுப்பூசிக்கு உதவிய கண்டுபிடிப்பால் நோபல் பரிசு பெறும் 2 மருத்துவர்கள்

சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது ‘கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்’ எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular