Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது!!!

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது!!!

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1500 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் விலை 230 ரூபாவாக உள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 339 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 218 ஆக பதிவாகியுள்ளது.

உள்ளூர் சிவப்பரிசி ஒரு கிலோகிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 6 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலைகள் முறையே 188 ரூபா மற்றும் 129 ரூபா என குறைக்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular