Saturday, July 27, 2024
HomeTamilசொத்து வரி மூலம் அரச வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!!

சொத்து வரி மூலம் அரச வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!!

உத்தேச சொத்து வரியானது அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு முழுமையான பகுப்பாய்வின் பின்னரே இது நடைமுறைப்படுத்தப்படும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

கணிசமான அளவு சொத்து வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே புதிய வரி விதிக்கப்படும் என்பதால், சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இது ஒரு முற்போக்கான வரியாகக் கருதும் அதேவேளை, இந்த வரி விதிப்பினால் உள்ளூராட்சி மற்றும் பொது மக்களும் பயனடைவார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு இது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் சொத்து பரிமாற்ற வரி திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை IMF முன்னர் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர் அளவிலான உடன்படிக்கைக்கு வருவதற்கு சமீபத்திய IMF மதிப்பாய்வின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular