Saturday, July 27, 2024
HomeTamilமருந்துகளுக்கு தட்டுப்பாடு

மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து 216 என்ற குறித்த எண்ணிக்கையை எதிர்வரும் மாதங்களில் 100 ஆகக் கொண்டுவர வேண்டும் என சுகாதாரத்துறையின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

14 உயிரைகக் காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லையென அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார். தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 மருந்துகள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய பற்றாக்குறையானது 216 மருந்துகளை பாதிக்கிறது, மேலும் அவற்றை விரைவில் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular