Saturday, July 27, 2024
HomeTamilடெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்!!

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்!!

வாராந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின் படி , வாரந்தம் 2,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.

Dengue
Dengue

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் டெங்கு வகை II வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூகநல ஆலோசகர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 51.7 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வருடத்தில் இதுவரை 32,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular