Saturday, July 27, 2024
HomeTamilபணவீக்க தரப்படுத்தலில் இலங்கை 13 ஆவது இடம்!

பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை 13 ஆவது இடம்!

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் வெளியிட்டுள்ள பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த பணவீக்க தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது.

ஹான்கேவின் கணிப்புகளின்படி, சில மாதங்களுக்கு முன்னர் உயர் பணவீக்கம் உள்ள முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் இடம்பெற்றிருந்தது.

கடந்த வருடம் ஜூன் மாத்தில் குறித்த தரப்படுத்தலில், உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

எவ்வாறாயினும், நாட்டில் பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இலங்கை குறித்த தர வரிசையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளிடப்பட்ட இலங்கையின் நவம்பர் மாத்துக்கான பணவீக்கம் 61 % ஆக பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், அண்மையில், தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் ஜனவரி மாதத்துக்கான பணவீக்கம் 54.2% ஆக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular