Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கையின் பிரபல நடிகர் உயிரிழப்பு!!

இலங்கையின் பிரபல நடிகர் உயிரிழப்பு!!

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் அண்டனி காலமானார்.

வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜெக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் ராகமவில் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 65.

நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் சென்றிருந்த நிலையில், மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் அண்டனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அண்டனி இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular