Saturday, July 27, 2024
HomeUncategorizedஇலங்கையின் வேலையின்மை விகிதம் 4.7%

இலங்கையின் வேலையின்மை விகிதம் 4.7%

இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை விகிதம் 3.4 சதவீதமாகவும், பெண்களின் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதமாகவும் உள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முழு நாட்டையும் உள்ளடக்கிய தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் வேலையற்றோர் எண்ணிக்கை 399,999 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மக்கள் தொகை சுமார் 8.6 மில்லியன் என அந்த அறிக்கை கூறுகிறது.

இதில் 65.0 சதவீதம் ஆண்கள் மற்றும் 35.0 சதவீதம் பெண்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular