Saturday, July 27, 2024
HomeTamilசீனி தட்டுப்பாடு???

சீனி தட்டுப்பாடு???

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் படி, நாட்டில் சுமார் 19,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளது.

எனவே நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (19) தெரணியகல, இலுக்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் கையிருப்பிலுள்ள குறிப்பிட்ட பொருட்களின் பெறுமதி அதிகரிக்கும்.

ஆனால் அரசாங்கம் என்ற வகையில், இது போன்ற தேவையற்ற இலாபத்தைத் தடுக்க அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கலாம். தற்போதைய அரசாங்கம் சீனி வரியை இரண்டு தடவைகள் மாற்றிய போது அவ்வாறான விலை உயர்வைத் தவிர்க்க அந்த நடவடிக்கையை பின்பற்றியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சீனி இருப்பு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டாலும், சீனி வர்த்தகர்கள் லாபம் ஈட்ட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவைப் பத்திரத்தில் கூட வரிக் காலத்தில் நாட்டில் உள்ள சீனி இருப்புகளை கவனமாகக் கணக்கிட வேண்டும் என்றும், இருப்புக்கள் தீரும் வரை அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular