Saturday, July 27, 2024
HomeTamilபொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு!!

பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் சிறைச்சாலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றிற்க்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்த்தையடுத்து அவர் நண்பர் ஒருவருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பொலிஸ் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் ( 09ஆம் திகதி) அவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போது , பொலிஸார் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு!!

இந்நிலையில் உயிரிழந்த அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது , வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்ததுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

அப்போது , அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் நிலத்தில் இருந்து இரண்டு முழம் உயரத்தில் தலைகீழாக கட்டித் தூக்கிவிட்டு, கையை பின்பக்கமாக கட்டிவிட்டு கொடூரமாக தாங்கினார்கள். நான் களவு எடுக்கவில்லை என்று கூறினேன். பின்னர் பெற்றோல் பையினுள் போட்டுவிட்டு தாக்கினார்கள். நான் மயங்கிவிட்டேன். இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முதல்நாள் சாப்பாடு தரவில்லை. அடுத்தநாள் சாப்பாடு தரவில்லை. அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போடக்கூடாது, யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். பின்னர் அடுத்த நாளும் பயமுறுத்தினார்கள். சாராயம் தந்து குடிக்குமாறு கூறினார்கள் . பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை.”

என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular